Python என்பது general purpose, dynamic, high level and interpreted programming language. applications உருவாக்க Object Oriented அணுகுமுறையை இது ஆதரிக்கிறது. Python மொழியைக் கற்றுக்கொள்வது எளிது.
இம்மொழியின் அதிகாரப்பூர்வமான பதிப்பு சி பைத்தான் (Cpython) என்பதாகும்.python
இலவசமாகக் கிடைக்கக் கூடிய நிரல் மொழியாகும். இது PERL மற்றும் PHP போன்றது.
python வரலாறு
பைத்தான் (Python Programming Language) என்பது ஒரு open source Programming Language ஆகும். இம்மொழியை உருவாக்கியவர் குய்டொ வான் ரூஸ்ஸொம்(Guido van Rossum) என்ற நெதர்லாந்து நாட்டு நிரலாளர்(programmer) ஆவார். இவர் இம்மொழிக்குப் பெயரை ‘Monty Python’s Flying Circus’ என்ற இங்கிலாந்து நகைச்சுவை நாடகத்தின் பெயரைக் கொண்டு python என்று வைத்தார். அந்நாடகம் ஒரு அடிமன வெளிப்பாட்டிய நகைச்சுவையை (Surreal humor) அடிப்படையாகக் கொண்டதாகும்.
ABC, Modula-3, C, C ++, Algol-68, SmallTalk, மற்றும் யூனிக்ஸ் ஷெல் மற்றும் பிற ஸ்கிரிப்டிங் மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் இருந்து Python பெறப்பட்டது.
Python பதிப்புரிமை பெற்றது. PERL போலவே Python மூல குறியீடு இப்போது GNU பொது பொது உரிமத்தின் (GPL) கீழ் கிடைக்கிறது.
பைத்தான் இப்போது முக்கிய வளர்ச்சிக் குழுவால் பராமரிக்கப்படுகிறது.
Guido van Rossum
டச்சு நாட்டைச் சேர்ந்த ஒரு கணினியில் நிரலர். இவர் Python எனும் நிரலாக்க மொழியை உருவாக்கியவர் ஆவார். 2005-ம் ஆண்டு முதல் டிசம்பர் 2012 வரை கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், அதன்பிறகு ஜனவரி 2013 முதல் டிராப்பாக்ஸ்(Dropbox) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
Python எனும் நிரலாக்க மொழியை உருவாக்கிய வான் ரோசம் 1996 ல் அதன் தொடக்கத்தைப்பற்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:
ஆறு வருடங்களுக்கு முன் டிசம்பர் 1989 ல் கிருஸ்துமஸ் விடுமுறையின் போது பொழுது போக்கிற்காக ஒரு நிரலாக்க மொழித்திட்டத்தை தேடிக் கொண்டிருந்தேன். என்னுடைய அலுவலகம் ... முடியிருந்தது ஆனால் நான் வீட்டில் ஒரு கணினி வைத்திருந்தேன். ஒரு புதிய ஸ்கிரிப்டிங் மொழிக்கு மொழிப்பெயர்ப்பு மென்பொருள் தயார் செய்ய முடிவு செய்தேன். ABC மொழிக்கு சந்ததியான இந்த நிரலாக்க மொழி திட்டத்திற்கு பைத்தான் என பெயரிட்டேன். மான்டி பைத்தான் பிளையிங் சர்க்கஸ் என்ற நாடகத்தின் ரசிகனாக இருந்த காரணத்தினால் புதிய மொழிக்கு பைத்தான் எனப் பெயரிட்டேன்.
2002 ஆம் ஆண்டு பிரஸ்ஸல்ஸ்லில் நடைபெற்ற மாநாட்டில் FOSDEM, வான் ரோசத்திற்கு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை யிடமிருந்து பைத்தான் மொழியாக்கதிற்காக 2001 கட்டற்ற மென்பொருள் முன்னேற்றத்திருக்கான விருது வழங்கப்பட்டது.
0 Comments