யாதேனுமொரு நபர் அல்லது நிறுவனத்தின் விசேட தேவை ஒன்று அல்லது பலவற்றை நிறைவேற்றும் நோக்கத்துக்காகவே இணையத்தளங்கள் உருவாக்கப்படுகின்றன. உலகலாவிய வலையிலே பல மில்லியன் கணக்கான இணையத்தளங்கள் காணப் படுகின்றன. அவற்றின் தேவைப்பாடுகள் பலவற்றை அவதானிக்க முடியும். அவற்றில் சில வருமாறு:
1) தகவல் தொடர்பாடல் (Communication)
இணையப் பயநர்களுக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற பல்வேறு தகவல் தொடர் பாடலுக்காக உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் : WWW.mafastech.blogspot.com,WWW.Inie.lk, WWW.edu/pub.gov.lk, WWWWWW.wcbopedia.org
2) வாணிகம் [E - (commerce)
இணையத்திலே பொருள்களையும் சேவைகளையும் வழங்கும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன. உதாரணம் : WWWWW.fairlin.lk, WWWww.annazon.com
3)பொழுதுபோக்கு (Entertainment)
பாடல், திரைப்படம், நாடகம் போன்றவற்றை கண்டுகளித்தல் அல்லது தரவிறக்கம் செய்தல், வினோத விளையாட்டுக்களில் ஈடுபடல், வானொலி கேட்டல், தொலைக்காட்சி பார்த்தல் போன்ற நோக்கத்துக்கான பொழுதுபோக்கு இணையத்தளங்கள் காணப்படுகின்றன. உதாரணம் : www.islandcricket.lk, www.ietflix.com, www.youtube.com
4) விளம்பரம் (Advertising)
நிறுவனங்களிலே உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள் மற்றும் சேவைகளை மக்களுக்கு காட்சிப்படுத்தும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன.
உதாரணம் ! WWWWWW', onclickads.net, WWWWWW.adcash.com, www.Immyadvertisingpay's.com
5) செய்திகளை வழங்கல் (News)
பல்லூடகத் தொழினுட்பத்துடன் கூடிய செய்திகளை வேகமாக மக்களுக்கு காட்சிப்படுத்தும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன. உதாரணம் : www.itnniews.lk, www.newsfirst.lk, www.bbc.co.uk
6) சமூக தொடர்புகளை கட்டியெழுப்பும் ஊடகங்கள் (Social Media)
கல்விமட்டம், தொழில்சார், விருப்பு மற்றும் வேறு நோக்கங்களுக்காக வேறு பட்ட சமூக குழுக்களிடையே தொடர்பை உருவாக்கல் மற்றும் அதனை தொடர்தல் போன்ற வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இணையத்தளங்கள் காணப் படுகின்றன.
உதாரணம் : www.facebook.coin, www.linkedin.com, www.twitter.com
7) தேடல் (Search)
சொல்லொன்றை அல்லது வாக்கியமொன்றை சாவியாகக் கொண்டு, உலகளாவிய வலையிலே எமது தேவைக்குப் பொருத்தமான கட்புல, செவிப்புல தகவல்களை தேடுவதற்குரிய வசதியைக் கொண்ட இணையத்தளங்கள் ஆகும். இவை தேடல் பொறி (Search Engine) என அழைக்கப்படுகிறது.
உதாரணம் : WWW.google.com, www.msn.com, Www.bing.com
8) தனிநபர் நோக்கம் (Personnel)
எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் போன்ற பிரசித்தி பெற்ற நபர்கள் அல்லது குழுக்கள் தமது தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்கு இவ்வாறான இணையத்தளங்கள் உதவுகின்றன.
உதாரணம் : www.president.gov.lk, www.arthurcclarke.net, www.nelsonmandela.org
4 Comments
Nice
ReplyDeleteTnx
DeleteSupperb
ReplyDeletetnx
Delete