விசுவல் பேசிக் நெட் – Visual Basic .NET (VB.NET) – விசுவல் பேசிக்கின் வழி வந்த மைக்ரோசப்ட் டொட் நெட்டில் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நிரல் மொழி. விசுவல் இசுடூடியோ எனும் மைக்ரோசப்ட்டின் விருத்தியாக்க மென்பொருளில் (தற்போதைய பதிப்பு: Visual Studio 2017) ஒரு பாகமாக இம்மொழி உள்ளது. அனைத்து .நெட் மொழிகளைப் போலவே விபி. நெட் இல் எழுதப்பட்ட நிரல்கள் இயங்குதவதற்கு .நெட் பணிச்சூழல் (தற்போதையது .net 4.5) அவசியம்.
இம்மொழியைப் பழகுவதற்கு மைக்ரோசப்ட் நிறுவனத்திடம் இருந்து நிரலாக்க மென்பொருளின் தற்போதைய இலவசப் பதிப்பைத் (Download Visual Studio Community) தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Download Latest Visual Studio Community : https://www.visualstudio.com/vs/community/
நிறுவும்போது உங்கள் பிரதான தேவை Visual Basic என்பதை நினைவில் கொள்ளுங்கள். நிறுவல் கேட்கும்போது Visual Basic என்று குறிப்பிடுங்கள். தரவிறக்கம் செய்து அதனை நிறுவிய பின்னர் உங்கள் மென்பொருளாக்கப் பயணத்தைத் துவங்கலாம்.
இப்பயிற்சியில் பயன்படுத்தப்படுவது Visual Studio Ultimate 2012 பதிப்பு எனினும் நிரல்மொழியும் பயன்படுத்தும் விதமும் Visual Studio 2012 Express உடன் ஒப்பிடுகையில் ஒரே விதமாக அமைந்திருக்கும். Visual Studio Ultimate 2012 பதிப்பில் பல வசதிகள் உள்ளது, ஆனால் அது இலவசமல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments