Variables என்றால் என்ன?
ஒரு தகவலை (Value) சேமித்து வைக்கவும் சேமித்து வைத்ததை பயன்படுத்தவும் Program ல் நாம் பயன்படுத்தும் token ஐ Variable என்கிறோம். Variable in which you can store the piece of data that a program is working on.
விளங்கும்படி சொல்வதானால் நீங்கள் ஒரு பாடசாலையின் தலைமையாசிரியர் என்று வைத்துக்கொள்வோம். ஒரு மாணவர் பாடசாலையில் சேர வருகிறார். அவரை உங்கள் பாடசாலையின் அலுவலரிடம் அனுப்பி வைக்கிறீர்கள். அவரும் சிறிது நேரம் கழித்து ஒரு பேப்பரில் அந்த மாணவர் குறித்து எழுதியதை (கீழே உள்ளது மாதிரி) உங்களிடம் தந்து உங்களுடைய ஒப்புதல் கேட்கிறார்.
Mafas
Ahamed lebbei
Railway road brinthuraichenai
Batticaloa
1996/07/06
B+
Male
2018/05/26
என்னங்க இது! மாணவருடைய விவரம் தராம சம்பந்தமில்லாமல் எதையோ கொடுக்கறீங்களே என்று டென்ஷன் வருமா வராதா?
இதில் என்ன பிரச்சனை என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா? ஆமாம் அதேதான். அவர் எதையோ எழுதி வைத்திருக்கிறாரே தவிர, அதை புரிந்துகொள்ள எது தேவையோ அதை எழுதாமல் விட்டுவிட்டார்.
அதனால்தான் உங்களால் அதை புரிந்துகொள்ளவோ அல்லது உங்களுக்கு தேவையான விவரத்தை அந்த form லிருந்து எடுத்து கையாளவோ முடியவில்லை. விடுபட்டுபோன அந்த ஒன்று வேறொன்றுமில்லை Variable தான்.
சரி இப்போது நாம் கையாள்வதற்கு தகுதியான விவரமாக எப்படி மாற்றுவது? Variable ஐ சேர்க்க வேண்டியதுதான்.
இங்கே பாருங்கள்
Name : mafas
Father Name : Ahamed lebbei
Address : Railway road brinthuraichenai
District : Batticaloa
Date of Birth : 1996/07/06
Blood Group : B+
Sex : Male
Date Joined : 2018/05/26
இப்படி ஒவ்வொரு தகவலையும் ஒரு Variable லில் சேமித்து வைத்தாயிற்று. மாணவர் பெயர் வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? Name என்ற Variable லில் உள்ள value வை எடுப்பீர்கள். இனி உங்களால் அந்த மாணவர் குறித்த விவரத்தை variable மூலமாக எளிதாக எடுக்கமுடியும். அப்படி முடிந்தால்தான் உங்களால் பாடசாலையை ஒழுங்காக நிர்வாகம் செய்ய முடியும். சரிதானே?
இதே முறையில்தான் நமது மூளையும் இயங்குகிறது. அதாவது ஒருவரைப் பார்த்ததும் அவருடைய பெயர் நமக்கு உடனே தெரிந்துவிடுகிறதுதானே. எப்படி? அந்த நபரின் பெயர் முதன்முதலில் நமக்கு தெரியவரும்போது நமது மூளையின் ஒரு பகுதியில் அந்த நபருடைய பெயர் store செய்யப்பட்டு அந்த பகுதியின் location ஐ இன்னாருடைய பெயர் என்ற variable மூலம் அடையாளமிடப்படுகிறது. பிறகு எப்போது அவரைப் பார்த்தாலும் நமது மூளையானது அவருடைய தகவல்கள் store செய்யப்பட்டிருக்கும் Location க்கு போய் அவருடைய பெயர் என்கிற variable ஐ எடுத்து அதில் என்ன value இருக்கிறதோ அதை நமக்கு தருகிறது.
இதே அடிப்படையில்தான் Program மும் இயங்குகிறது. அதாவது நமது program ல் இடம்பெறும் data வை கையாள்வதற்கு முன் அதை store செய்ய ஒரு variable தேவைப்படுகிறது. எனவே நமது Program மில் data வை சேமிக்கவும் பின்னர் அதை பயன்படுத்தவும் Variable ரொம்ப முக்கியம்.
உதாரணத்திற்கு இரண்டு எண்களைக் கூட்ட program எழுதுவோமா?
இரண்டை கூட்டவேண்டுமென்றால் எந்த இரண்டு என்ற கேள்வி வரும்.
10
20
10
என்று எழுதினால் computer ருக்கு விளங்காது. இதை variable லில் store செய்யுமாறு நமது program ஐ மாற்றவேண்டும்.
எனவே
A = 10
B = 20
C = 10
என்று எழுதினால் computer புரிந்துகொள்ளும்.
அதாவது 10 ஐ ஒரு memory location ல் store செய்து அந்த location ஐ A என்று அடையாளப்படுத்தி புரிந்துகொள்கிறது.
அடுத்து 20 ஐ இன்னொரு memory location ல் store செய்து அந்த location ஐ B என்று அடையாளப்படுத்தி புரிந்துகொள்கிறது.
அடுத்து 10 ஐ இன்னொரு memory location ல் store செய்து அந்த location ஐ C என்று அடையாளப்படுத்தி புரிந்துகொள்கிறது.
அடுத்து 10 ஐயும் 20 ஐயும் கூட்ட நாம் எப்படி எழுதுவது? எந்த 10 என்று கேள்வியெழுகிறது.
A + B என்று எழுதினால் மறுபடியும் புரிந்து கொள்ளாது.
ஏனென்றால் A + B ஆனது 10 + 20 ஆக மாற்றம் பெறுகிறது.
அதாவது
A என்ற location னில் உள்ள value + B என்ற location னில் உள்ள value
10 + 20
இப்பொழுது 30 என்ற மதிப்பு கிடைக்கிறது. 30 என்றால் என்ன? என்று முழிக்கிறது. Computer ருக்கு விளங்கவைக்க நாம் நமது program ஐ மாற்றவேண்டும்.
C = A + B
அதாவது
A என்ற location னில் உள்ள value ஐயும்
B என்ற location னில் உள்ள value ஐயும் கூட்டி
வரும் மதிப்பை ஒரு memory location ல் store செய்து அந்த location ஐ C என்று அடையாளப்படுத்தி புரிந்துகொள்கிறது.
ஒரு Program மிற்கு எத்தனை variable தேவைப்படும்?
அதை நீங்கள்தான் முடிவு செய்யவேண்டும். அதாவது ஒரு மாணவருடைய application ல் என்னென்ன விவரங்கள் இருந்தால் நல்லது என்று எப்படி நீங்கள் முடிவெடுக்கிறீர்களோ, அதைப்போன்றுதான் உங்களுடைய Program ல் என்னென்ன விவரங்கள் கையாள வேண்டுமோ அத்தனை variable ஐ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

0 Comments