Header Ads Widget

OPERATOR


OPERATOR:

OPERATOR என்பது ஒரு செயலை குறிக்கும் SYMBOL ஆகும். An operator is a symbol that represents an action.

உதாரணத்திற்கு + என்கிற SYMBOL இரு எண்களை கூட்டுவதற்கு பயன்படுகிறது அல்லவா? எனவே...

+ என்பது OPERATOR; கூட்டல் என்பது அதன் செயல் (ACTION).

OPERAND:

OPERATOR களை தனியாக கையாள முடியாது. இவற்றை OPERAND டுகளுடன் சேர்த்துதான் பயன்படுத்தமுடியும்.

A + B
10 + 2
10 + A

மேற்கண்டவற்றில் A, B, 10, மற்றும் 2 ஆகியவை OPERAND டுகள் ஆகும்.

OPERATOR வகைகள் (TYPES OF OPERATOR):

ஒவ்வொரு PROGRAMMING LANGUAGE லும் காணப்படும் பிரத்யேகமான OPERATOR களைத் தவிர்த்து அனைத்து PROGRAMMING LANGUAGE லும் காணப்படும் பொதுவான OPERATOR வகைகள் என்னவென்று பார்ப்போம்.
ARITHMETIC OPERATORS
BOOLEAN OPERATORS
RELATIONAL OPERATORS
STRING OPERATORS

Arithmetic Operators :

ஒரு ArithmeticOperator என்பது ஒரு கணித செயல்பாடாகும், இவை பொதுவான கணிதத்தில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பெரும்பாலான கணினி மொழிகளில் இதுபோன்ற operators ஒரு தொகுப்பினைக் கொண்டிருக்கிறது, இது பல செயல்களை செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றது.

Addition :

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை கூட்டுவதற்கு addition operator(+) பயன்படுகிறது.

Subtraction :

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை கழிப்பதற்கு subtraction operator(-) ஆனது பயன்படுகிறது.

Multiplication :

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை பெருக்குவதற்கு multiplication operator(*) ஆனது பயன்படுகிறது.

Division:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை வகுப்பதற்கு division operator(/) ஆனது பயன்படுகிறது.

Modulus:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை வகுக்கும் போது மீதியுடன் கிடைத்தால் அந்த மீதமுள்ள value-வினை modules ஆகவும் இதுவே அதன் operator(%) ஆகும்.

Floor Division:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட value-வினை வகுக்கும் போது கிடைக்கின்ற ஈவு ஆனது float ஆக இல்லாமல் integer ஆக இருக்கின்ற மதிப்பினை floor division என்கிறோம்.இதன் operator(//) என்பதாகும்.

Relational Operators

Relational operator என்பது இரண்டு எண்களை ஒப்பிட்டு அவற்றின் தன்மையைக் கூறுவதற்கு பயன்படுவதாகும். பைத்தானில் எட்டு ஒப்பீட்டு நடவடிக்கைகள் உள்ளன. அவர்கள் அனைவரும் ஒரே முன்னுரிமை (இது boolean நடவடிக்கைகளை விட அதிகமாக உள்ளது). ஒப்பீடுகளை தன்னிச்சையாக பிணைக்கலாம்.

Equal(==) :

இரு varible-ன் மதிப்பு சமமாக இருப்பதற்கு equal operator பயன்படுத்தபடுகிறது.இதன் operator(==)ஆகும்.

Not equal(!=) :

இரு varible-ன் மதிப்பு சமம் இல்லைஎன்பதற்கு Not equal operator பயன்படுத்தபடுகிறது. இதன் operator(!=)ஆகும்.

Greater than(>) :

இரு varible-ன் மதிப்பில் வலது பக்க மதிப்பினை விட இடது பக்க மதிப்பு பெரியதாக இருப்பதை குறிப்பிடுவதற்கு இவ்வகை operator(>) பயன்படுகிறது.



Less than(<) :

இரு varible-ன் மதிப்பில் வலது பக்க மதிப்பினை விட இடது பக்க மதிப்பு சிறியதாக இருப்பதை குறிப்பிடுவதற்கு இவ்வகை operator(<) பயன்படுகிறது.

Greater than equal(>=) :

இரு varible-ன் மதிப்பில் வலது பக்க மதிப்பினை விட இடது பக்க மதிப்பு பெரியதாக அல்லது சமமாக இருப்பதை குறிப்பிடுவதற்கு இவ்வகை operator(>) பயன்படுகிறது.

Less than equal(<=) :

இரு varible-ன் மதிப்பில் வலது பக்க மதிப்பினை விட இடது பக்க மதிப்பு சிறியதாக அல்லது சமமாக இருப்பதை குறிப்பிடுவதற்கு இவ்வகை operator(<) பயன்படுகிறது

Assignment Operators :

Equal operand(=) :

வலது பக்க operand-லிருந்து இடது பக்க operand-க்கு மதிப்புகளை ஒதுக்குகிறது.



Add Equal operand(+=) :

இடது பக்க operand-ஐ வலது பக்க operand-ல் இடது பக்க operand-வுடன் variable-னை சேர்த்து இவை இடது பக்க operand-க்கு சமமாகும்.c += a அல்லது c=c+aஎன்பது c மற்றும் a னை சேர்த்து c என்ற variable-ல் store செய்யப்படும்.



Sub Equal operand(-=) :

இடது பக்க operand-ஐ வலது பக்க operand-ல் இடது பக்க operand-வுடன் variable-னை கழித்து இவை இடது பக்க operand-க்கு சமமாகும்.c += a அல்லது c=c-aஎன்பது c மற்றும் a னை கழித்து c என்ற variable-ல் store செய்யப்படும்.



Multiple Equal operand(*=) :

இடது பக்க operand-ஐ வலது பக்க operand-ல் இடது பக்க operand-வுடன் variable-னை பெருக்கி இவை இடது பக்க operand-க்கு சமமாகும்.c *= a அல்லது c=c*aஎன்பது c மற்றும் a னை பெருக்கி c என்ற variable-ல் store செய்யப்படும்.

Divide Equal operand(/=) :

இடது பக்க operand-ஐ வலது பக்க operand-ல் இடது பக்க operand-வுடன் variable-னை வகுத்து இவை இடது பக்க operand-க்கு சமமாகும்.c /= a அல்லது c=c/aஎன்பது c மற்றும் a னை வகுத்து c என்ற variable-ல் store செய்யப்படும்.


Modulus Equal operand(%=) :

இடது பக்க operand-ஐ வலது பக்க operand-ல் இடது பக்க operand-வுடன் variable-னை  வகுக்கும் போது மீதியுடன் கிடைத்தால் அந்த மீதமுள்ள value-வினை modules.இவை இடது பக்க operand-க்கு சமமாகும்.c %= a அல்லது c=c%aஎன்பது c மற்றும் a னை வகுக்கும் போது மீதியுடன் கிடைத்தால் அந்த மீதமுள்ள மதிப்பு c என்ற variable-ல் store செய்யப்படும்.

Logical Operator

Logical operator என்பது logical function-ஆன and,or,not செய்வதற்கு உதவுகின்ற operator ஆனது logical operator ஆகும்.

Logical operator ஆனது இரண்டு operands-க்கு இடையில் பயன்படுத்தபடும். இரண்டு operand-ம் எப்படி இருக்கிறது என்பதை logical operator மூலம் தெரிந்து கொள்ளலாம். Logical operator ஆனது bits அதாவது 0 மற்றும் 1-ல் மட்டுமே செயல்படும்.

and(&):

and operator என்பது இரண்டு operands-ஐ and(பெருக்குல்) செய்வதற்கு பயன்படுகிற operator ஆனது and(&) ஆகும்.



or(|):

or operator என்பது இரண்டு operands-ஐ or அதாவது கூட்டுவதற்கு பயன்படுகிற operator ஆனது or(|) ஆகும்.இதில் குறைந்தது ஒரு நிபந்தனை நிறைவேற்றப்படும்.



xor(^):

xor operator என்பது இரண்டு operands-ஐ xor function-ஐ செய்வதற்கு பயன்படுகிற operator ஆனது xor(^) ஆகும்.



Complement(~):

complement operator என்பது operands-ஐ inverse function-ஐ செய்வதற்கு பயன்படுகிற operator ஆனது complement(~) ஆகும்.அதாவது 0 ஆனது 1 ஆகவும்,1 ஆனது 0 ஆகவும் மாற்றப் படுவதே complement.

Bitwise Operators

Left shift(<<):

Left shift operator என்பது operands-ல் உள்ள bit-ல் இடது பக்கமாக shift செய்யபடுகிறது.இதற்கு பயன்படுகிற operator ஆனது leftshift(<<) ஆகும்.



right shift(>>):

right shift operator என்பது operands-ல் உள்ள bit-ல் வலது பக்கமாக shift செய்யபடுகிறது.இதற்கு பயன்படுகிற operator ஆனது rightshift(>>) ஆகும்.

Example

Post a Comment

0 Comments